கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்

கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-10-12 20:45 GMT

கால்நடை ஆய்வாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்பின்படி 6-வது ஊதிய குழுவில் வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாசலம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர்கள் ஆனந்தராஜா (திருச்சி), முத்துக்குமார் (புதுக்கோட்டை), ரவி (அரியலூர்), பன்னீர்செல்வம் (பெரம்பலூர்) ஆகியோர் தலைமை தாங்கினா். இதில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து திரளான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மாலையில் மாநில துணைத்தலைவர் சந்திரா உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்