தேக்கம்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் சந்திரலேகா ஜெயக்கொடி தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவத் துறையின் தேனி மண்டல இணை இயக்குனர் அன்பழகன், பெரியகுளம் உதவி கோட்ட இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.சுப்புலாபுரம் கால்நடை உதவி மருத்துவர் ராஜசுந்தர், உதவியாளர் கவிதா ஆகியோர் கால்நடைகளுக்கு கருவூட்டல், ஆண்மை நீக்கம், சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகிய பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமின் முடிவில் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.