கால்நடை மருத்துவ முகாம்

சேரன்மாதேவி யூனியனில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-01-07 19:07 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி யூனியன் தெற்கு அரியநாயகிபுரம், தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து புதூர் ஆகிய பகுதிகளில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறப்பாக கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தெற்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் உஷாராணி, துணைத்தலைவர் அண்ணாதுரை, தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சந்தனமாரி, துணைத் தலைவர் ரெஜினா, தி.மு.க மாவட்ட பிரதிநிதிகள் மூலச்சி சீவல முத்துகுமார், பேச்சித்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்