கால்நடை மருத்துவ முகாம்
மடப்புரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது;
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே மடப்புரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை உதவி மருத்துவர் சுதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜ் செல்வநாயகம் வரவேற்றார். கால்நடை உதவி மருத்துவர் அன்பரசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் வடிவுக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 130-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், கோழிக்கு வெள்ளை கழிச்சல், தடுப்பூசி போடுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.