கால்நடை மருத்துவ முகாம்

மயிலாடுதுறை அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது

Update: 2022-12-29 18:45 GMT

மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் தலைமையில் டாக்டர்கள் கவின், தர்மராஜ் மற்றும் குழுவினர் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சையும், மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி, சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டது. மேலும் கால்நடைகள் பராமரிப்பு குறித்து ஆலோசனைகளையும் வழங்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்