கால்நடை மருத்துவ முகாம்

தெய்வநாயகப்பேரியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-11-19 20:39 GMT

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள அரியகுளம் பஞ்சாயத்து தெய்வநாயகப்பேரியில் தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அரியகுளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் முகாமை தொடங்கி வைத்து சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை மேலாண்மைக்கும் பரிசுகளை வழங்கினார். மூலைக்கரைப்பட்டி கால்நடை டாக்டர் ரஞ்சித், கால்நடை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, உதவியாளர் மகேஸ்வரி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் குடற்புழு நீக்கம், சினை பார்த்தல், செயற்கை முறை கருவூட்டல் மற்றும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்னதாக அரியகுளம் பஞ்சாயத்து அம்பலத்தில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணத்தை பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி செயலர் கல்யாணசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்