கீரனூர் ஊராட்சிக்குட்பட்ட சாமிபிள்ளை புதூரில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு, ஆண்மை நீக்கம், தடுப்பூசி மற்றும் செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உட்பட பல்வேறு சிகிக்சை அளிக்கப்பட்டது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் வளர்த்து வரும் கன்றுகள் பேரணியாக கொண்டு செல்லப்பட்டது. இதில் சிறந்த 3 கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.