கால்நடை மருத்துவ முகாம்
வடதொரசலூரில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை உதவி மருத்துவர் பெருமாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிகாமணி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தாது உப்பு கலவை அளித்தல், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.