பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணி

பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணி

Update: 2023-07-21 20:14 GMT

பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம், இ- சேவை மையம், கணினி அறை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தாசில்தார் அலுவலக வளாகம் மற்றும் பூக்கொல்லை பகுதியில் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான இடத்தையும் பார்வையிட்டார். ஆய்வின்போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, தாசில்தார் சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மணி, தேர்தல் துணை தாசில்தார் கண்ணகி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்