வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை- விற்பனையகம் தொடக்கம்
வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை- விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.
குளித்தலை சரகத்தில் குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் அயன் சிவாயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை மற்றும் விற்பனையகம் தொடங்க விழா நடைபெற்றது. இதனை கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார். இதில், குளித்தலை சரக துணைப்பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம், கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குனர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கள அலுவலர் ரமேஷ், தோகைமலை கள அலுவலர் குமார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.