மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடக்கிறது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
முத்தாரம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் நவக்கிரக ஹோமம், புனித நீர் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி பூஜை, முதலாம் கால யாக பூஜை நடந்தது.
2-வது நாளான நேற்று காலையில் வேத பாராயணத்துடன் 2, 3-வது கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
இன்று, கும்பாபிேஷகம்
விழாவில் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு மேல் 4-வது கால யாகசாலை பூஜை, 10 மணிக்கு கோ பூஜை, 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம், மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகத்துடன் மகா கும்பாபிஷேகம் நடக்கின்றது.
வீதி உலா
பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, புஷ்பாஞ்சலி, 10 மணிக்கு அம்பாள் தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.
இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீன 103-வது குரு மகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் குரு சிவசந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.