வெங்கடேஸ்வரா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

55 ஆண்டுகளுக்கு பிறகு வெங்கடேஸ்வரா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.

Update: 2023-01-26 17:50 GMT

வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1967-68-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் 55 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி அந்த பள்ளியில் இன்று நடைபெற்றது.

இதில், பல்வேறு அரசுத்துறைகளில் உயர் பதவி வகித்து ஓய்வுப்பெற்றவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அவர்கள் தாங்கள் படித்த வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, ஒருவருக்கு ஒருவர் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்தனர்.

மேலும் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய தலைமையாசியர் நெப்போலியனுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கம்ப்யூட்டர், பீரோ, புத்தக அலமாரிகள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கவிஞர் லக்குமிபதி, சேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்