வேங்கைவயல் வழக்கு: 8 பேரின் ரத்த மாதிரி கோர்ட்டில் ஒப்படைப்பு
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக 8 பேரின் ரத்த மாதிரி சேகரித்து கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.;
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் மறுத்த நிலையில், அவர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி பரிசோதனை கடந்த 5-ந் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. இதில் 8 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
இந்த மாதிரி நேற்று புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரத்த மாதிரிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்று சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அனுப்பி வைக்க உள்ளனர்.