வேங்கைவயல் வழக்கு: மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு

வேங்கைவயல் வழக்கு: மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-20 18:26 GMT

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனு மீதான விசாரணையின் போது அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரியவரும். இதற்கிடையில் ஏற்கனவே டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவுகள் படிப்படியாக வந்திருப்பதாகவும், அதனை வைத்தும் ஒரு புறம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்