மதநல்லிணக்கத்தை வலியுறுத்திஇந்துக்களுக்கு விநாயகர் சிலை, பூஜை பொருட்கள் வழங்கிய முஸ்லிம்கள்

Update: 2023-09-17 19:45 GMT

கிருஷ்ணகிரி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலை மற்றும் பூஜை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ரியாஸ், நதிம், அஷ்ரப், ஏஜாஸ், ஜாபர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்