வேம்படி சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா
ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாட சுவாமி மற்றும் பேச்சியம்மன் கோவில் கொடைவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் கோவிலுக்கு எடுத்து வருதல், அதனை தொடர்ந்து தீப ஆராதனை, பொங்கலிடுதல், இரவு சாமவேளை பூஜை, பூக்குழி இறங்குதல் உள்பட பல பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.