வேலூர்: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - அரசு பஸ் கண்டக்டர் பலி

வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார்.

Update: 2022-08-20 08:17 GMT

வேலூர்,

வேலூர் அருகே உள்ள வல்லண்டராம் வசந்தம் நகரை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது33). இவர் கொணவட்டம் போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மேல்மொணவூர் இந்தியன் வங்கி அருகே வந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூருரில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் பரந்தாமன் அணிந்திருந்த ஹெல்மெட்டையும் தாண்டி அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரந்தாமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்