வேலூர் டைடல் பார்க் கட்டுமான பணிகள் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் ஆய்வு

கட்டுமான பணிகள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2023-08-01 17:13 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என்று தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்