வேலூரில் இடம் பிடிக்கும் கம்பளி வியாபாரிகள்

சீசன் தொடங்கும் முன்பே வேலூரில் கம்பளி வாயாபாரிகள் இடம் பிடிக்க தொடங்கி விட்டனர்.

Update: 2023-09-03 17:17 GMT

வேலூர் எப்பொழுதுமே வித்தியாசமான கால நிலைக்கு பெயர் பெற்ற ஊர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரே நாளில் வெயில், மழை மற்றும் குளிர் என வாட்டி வதைப்பதுண்டு. குளிர் காலத்தை பயன்படுத்தி ஒடிசாவை சேர்ந்த வியாபாரிகள் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வேலூரில் முகாமிட்டு குளிருக்கு இதமாக கம்பளி போர்வைகள் மற்றும் குல்லாக்கள் போன்ற துணி வகைகளை விற்பனை செய்ய வருகின்றனர். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் விற்பனை செய்ய வருவதால், இந்த வியாபாரிகளிடம் கம்பளி துணிகள் வாங்க வரும் வேலூர் சுற்றுப்பகுதி வாடிக்கையாளர்கள் நட்பாகவும் பழகி வருகின்றனர்.

நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் இருந்து கம்பளிகளை வாங்கி வந்து வேலூரில் விற்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கும் முன்பே இவர்கள் வேலூருக்கு வந்து, தாங்கள் வழக்கமாக கடை விரிக்கும் இடமான, சாரதி மாளிகை எதிரில் கோட்டை வெளி பூங்கா ஓரத்தில் இடம் பிடித்து விட்டனர். வழக்கம் போல வேலூர் வெயிலுக்கு குடைகளை பிடித்துக்கொண்டு, குளிருக்கு கம்பளி விற்க தொடங்கி விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்