வெள்ளரிக்காயூரணி ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா

வெள்ளரிக்காயூரணி ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா நடைபெற்றது.

Update: 2022-11-06 18:45 GMT

நாசரேத்:

தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் மூக்குபேறி சேகரம் நாசரேத் அருகிலுள்ள வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத் தவான்கள் ஆலயப் பிரதிஷ்டைப் பண்டிகை மற்றும் அசனப் பண்டிகை விழா 6 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு ஊரை சுற்றி ஆயத்த ஜெபபவனி நடை பெற்றது. 2-ஆவது நாள் மாலையில் கன்வென்ஷன் கூட்டத்தில் நாசரேத் இயேசு நமக்குள் வாழ்கிறார் ஊழியங்களின் நிறுவனர் ராஜன் அகஸ்டின் பேசினார். 3, 4-ஆவது நாள் இரவு கன்வெ ன்ஷன் கூட்டங்களில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியர் எட்வின் சாம்ராஜ் பேசினார். 5-ஆவது நாள் மாலையில் பண்டிகை ஆயத்த ஆராதனை மற்றும் ஞானஸ்நான ஆராதனை மூக்குபேறி சேக ரத்தலைவர் டேனியல் ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் குருவானவர் ஜெபராஜ் பேசினார். இரவு 9 மணிக்கு கண் பார்வையற்ற பாடசாலை மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 6-வதுநாள் அதிகாலை பிரதிஷ்டைப் பண்டிகை ஆராதனையும் பரிசுத்த நற்கருணை ஆராதனையில் பிரைன்ட்நகர் சேகரத் தலைவரும், ஜி.எம்.எஸ். பொதுச் காரியதரிசியுமான டேனியல் எட்வின் பேசினார். மாலை 6 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடைபற்றது. இதற்கான ஏற்பாடுகளை சேகரத் தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் சபை ஊழியர் ஜாண் வில்சன் முன்னிலையில் பரிபாலனக் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்