வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா
தா.பழூரில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா நடைபெற்றது.;
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 24-ம் ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி மைக்கேல் பட்டி பங்குத்தந்தை அடைக்கல சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை அடைக்கல சாமி தேரை மந்திரித்தார். பின்னர் ஆடம்பர தேர்பவனி தா.பழூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.