பாபநாசத்தில் நீண்ட வரிசையில் பருத்தி மூட்டைகளுடன் காத்திருந்த வாகனங்கள்

பாபநாசத்தில் நீண்ட வரிசையில் பருத்தி மூட்டைகளுடன் காத்திருந்த வாகனங்கள்

Update: 2022-07-07 19:53 GMT

பாபநாசம்:

பாபநாசத்தில் அண்மையில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குறைந்த விலையை வணிகர்கள் நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து வணிகர்கள், விவசாயிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் ஏலம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த இரு நாட்களில் பருத்தி ஏலத்தில் தங்கள் விளைவித்த பருத்தியை விற்க பாபநாசம் சுற்று வட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பருத்தி மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். அந்த வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தன. இன்று நடைபெறும் ஏலத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து பருத்திகளையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்