ராஜபாளையம் - சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் சென்றன

திறப்பு விழாவிற்கு முன்பே ராஜபாளையம் சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் சென்றன.

Update: 2023-06-05 19:24 GMT

ராஜபாளையம்

திறப்பு விழாவிற்கு முன்பே ராஜபாளையம் சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் சென்றன.

ரெயில்வே மேம்பாலம்

ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவு பெறாமல் தற்காலிகமாக வாகனங்கள் செல்லவும், நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த மேம்பால பாதை திறக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வந்தன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நலனுக்காக ரெயில்வே மேம்பாலத்தில் தற்காலிகமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வாகனங்கள் சென்றன

இதுகுறித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ரெயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிக்க கோரி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தேன். அத்துடன் அந்த பணிகளை தினசரி ஆய்வு செய்தேன்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருதி தற்போது மேம்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டு இம்மாதத்தில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு மேம்பாலம் முறையாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்