வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சத்தில் தள்ளு வண்டிகள்

நாகையில் வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான தள்ளு வண்டிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

Update: 2023-07-06 19:15 GMT

நாகையில் வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான தள்ளு வண்டிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

தள்ளுவண்டி

நாகையில் சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா தள்ளு வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமை தாங்கி, சாலையோர வியபாரிகளுக்கு ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான தள்ளுவண்டிகளை வழங்கினார். 

விழாவில் முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் சங்கர் வரவேற்றார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

வாழ்வாதாரத்தை மேம்படுத்த...

நாகை நகராட்சியில் சாலையோரங்களில் கடைவைத்து பிழைப்பு நடத்துவோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து நகராட்சி பகுதிகளில் கடை வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பழம், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் 9 பேருக்கு ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலும், பூ வியாபாரி ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா விற்பனை தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார். 

இதில் கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், உதவி கலெக்டர் ப்னோத் ம்ருகேந்தர்லால், நகரமைப்பு அலுவலர் நாகை நாகராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்