தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட20 வாகனங்கள் பறிமுதல்; ரூ.5½ லட்சம் அபராதம்
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போக்குவரத்து விதிகளை மீீறி இயக்கப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.5½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போக்குவரத்து விதிகளை மீீறி இயக்கப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.5½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சிறப்பு வாகன தணிக்கை
போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் உத்தரவின்படி தஞ்சை துணைப்போக்குவரத்து ஆணையர் கருப்புசாமி தலைமையில் தஞ்சை சரகத்தில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு வாகன தணிக்கை குழுவினர் 5 பிரிவுகளாக தஞ்சை மற்றும் சுற்றுப்புறத்திலும், இதர மாவட்டங்களிலும் வாகன சோதனை மேற்கொண்டனர்.
20 வாகனங்கள் பறிமுதல்; ரூ.5½ லட்சம் அபராதம்
இந்த சோதனையில் குறிப்பாக அனுமதிச்சீட்டு, தகுதிச்சான்று மற்றும் டிரைவிங் லைசென்சு இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இதில் 59 வாகனங்களுக்கு குற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டது. 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பதிவுச்சான்று ரத்து
போக்குவரத்து வாகனங்கள் முறையாக இன்றியும். சொந்த வாகனங்கள் வாடகைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 சொந்த உபயோக வாகனங்கள் வாடகைக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக துணைப்போக்குவரத்து ஆணையர் கருப்புசாமி கூறும்போது, சொந்த வாகனங்கள் வாடகைக்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் மேற்படி வாகனங்களின் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் பதிவுச்சான்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த உபயோக வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் மற்றும் அரசுத்துறையில் வாடகைக்கு அமர்த்தப்படுவதையும் தவிர்க்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்படி வாகனங்களின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும் என்றார்.