வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.

Update: 2023-01-14 18:11 GMT

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சசிக்குமார், நல்லதம்பி மற்றும் அலுவலர்கள் கட்டியாவயல், லேனா விளக்கு பகுதியில் கனரக வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 85 வாகனங்களை சோதனையிட்டனர். அதிக பாரம் ஏற்றி சென்றல், உரிய ஆவணங்கள் இல்லாதவை உள்பட பல்வேறு பிரிவுகளில் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் செலுத்த வேண்டிய வரியினங்கள் ரூ.62 ஆயிரம் வரை வசூலித்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்