கொடைக்கானல் வாரச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

கொடைக்கானல் வாரச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்தது.

Update: 2023-07-16 21:00 GMT

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர். சந்தையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

நேற்றும் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டது. அதில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180-க்கும், தக்காளி கிலோ ரூ.120-க்கும் இஞ்சி ரூ.250-க்கும் முள்ளங்கி ரூ.100-க்கும், பாகற்காய் ரூ.80-க்கும், நூல்கோல் ரூ.80-க்கும் விற்பனையானது. பெரிய வெங்காயம் (பல்லாரி) 4 கிலோ ரூ.100-க்கும், மாம்பழம் கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்றது. இதனை பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கினர். இதனால் காய்கறிகள் விலை உயர்வால் வாங்குவதற்கு பொதுமக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவாகிறது. காய்கறிகள் விலை உயர்வால் சம்பளம் முழுவதும் அதற்கே சரியாகிவிடுகிறது. எனவே ரேஷன் கடைகளில் அனைத்து காய்கறிகளும் குறைவான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்