தென்னம்பாளையம் மார்க்கெட்டில் புடலங்காய் விலை சரிவு

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று புடலங்காய் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 15 கிலோ எடை கொண்ட புடலங்காய் கட்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-06-09 17:24 GMT

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று புடலங்காய் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 15 கிலோ எடை கொண்ட புடலங்காய் கட்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வரத்து அதிகரிப்பு

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மற்றும் மொத்த விற்பனை மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தக்காளி, வெங்காயம், புடலை, பீர்க்கங்காய், பாகற்காய், அவரை உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சமீப காலமாக பீர்க்கங்காய், புடலங்காய் உள்ளிட்டவை பல்லடம், அவினாசி, பொங்கலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக புடலங்காய் வரத்து அதிக அளவில் உள்ளது. இவை சுமார் 15 கிேலா எடை கொண்ட கட்டுகளாக விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று சுமார் 8 டன் புடலங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் புடலங்காய் வியாபாரம் சூடுபிடித்தது.

விலை சரிவு

அதே நேரம் புடலங்காயின் விலை ேநற்று சரிந்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கட்டு புடலங்காய் (மொத்த விற்பனை விலை)ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஒரு கட்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் காய்களின் தரத்திற்கு தகுந்தவாறு ரூ.100-க்கும் புடலங்காய் கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

2 வாரத்தில் ஒரு கட்டுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விலை குறைவாக இருந்ததால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் மளிகை கடைக்காரர்கள் அதிக அளவில் புடலங்காய்களை வாங்கி சென்றனர். இதேபோல் நேற்று பாகற்காய், பீட்ரூட் ஆகியவையும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்