சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்

திருமக்கோட்டை- பாளையக்கோட்டை இடையே சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-08-26 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் இருந்து பாளையக்கோட்டை செல்லும் சாலையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. இந்த சாலை வழியாக பட்டுக்கோட்டை, மன்னார்குடிக்கு பஸ்கள், பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன. இந்த சாலை குறுகலாக உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமக்கோட்டை-பாளையக்கோட்டை சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்