கஞ்சா விற்ற காய்கறி வியாபாரி கைது
கஞ்சா விற்ற காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் பூண்டு செல்வம் என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை மறைமுகமாக விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பூண்டு செல்வத்தை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். விசாரணையில் இவர் கும்பகோணத்தில் இருந்து காய்கறி ஏற்றி வரும் பொழுது கஞ்சாவை வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக போட்டு மருதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.