உடுமலை உழவர்சந்தையில் கடந்தமாதம் ரூ.2கோடியே18லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.

உடுமலை உழவர்சந்தையில் கடந்தமாதம் ரூ.2கோடியே18லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.

Update: 2022-10-01 10:58 GMT

உடுமலை

உடுமலை உழவர்சந்தையில் கடந்தமாதம் ரூ.2கோடியே18லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.

உழவர்சந்தை

உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை உள்ளது. இந்த சந்தையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 2,142 விவசாயிகள் மொத்தம் 7 லட்சத்து 85 ஆயிரத்து 770 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 81ஆயிரத்து 20-க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை பொதுமக்கள் 91 ஆயிரத்து 112 பேர் வாங்கி பயனடைந்தனர்.

உடுமலை உழவர் சந்தையில் நேற்று ஒருகிலோ கத்தரிக்காய் ரூ.30 முதல் ரூ.34

வரைக்கும், வெண்டைக்காய ்ரூ30 முதல் ரூ35 வரைக்கும், தக்காளி (நாட்டு ரகம்) ரூ.24 முதல் ரூ.30

வரைக்கும், தக்காளி (ஆப்பிள் ரகம்) ரூ.32- முதல்ரூ.38 -வரைக்கும், அவரைக்காய் ரூ.38முதல்ரூ.46வரைக்கும்,

புடலங்காய் ரூ.35 முதல் ரூ.40 வரைக்கும், பீர்க்கங்காய் ரூ.35 முதல் ரூ.65வரைக்கும் விற்பனையானது.

சுரைக்காய்

சுரைக்காய் ரூ.16 முதல் ரூ.20 வரைக்கும், பாகற்காய் ரூ.45 முதல் ரூ.65 வரைக்கும், கொத்தவரை ரூ.35 முதல் ரூ.40 வரைக்கும், பூசணிக்காய் ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், அரசாணிக்காய்ரூ.12 முதல் ரூ.16 வரைக்கும், பச்சை மிளகாய் ரூ.35முதல் ரூ.50 வரைக்கும், சின்னவெங்காயம் ரூ.32முதல் ரூ.64 வரைக்கும் விற்பயைானது. பெரிய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரைக்கும், பொறியல் தட்டை ரூ.25 முதல் ரூ.30 வரைக்கும், முருங்கைக்காய் ரூ.40 முதல் ரூ.55 வரைக்கும், சேனைக்கிழங்கு ரூ 40முதல் ரூ.44 வரைக்கும், கருணைக்கிழங்கு ரூ.44 முதல் ரூ.48 வரைக்கும், உருளைக்கிழங்கு ரூ.30 முதல் ரூ.44 வரைக்கும் கேரட் ரூ.70 முதல் ரூ.90 வரைக்கும், பீட்ரூட் ரூ.40முதல் ரூ.45வரைக்கும், முட்டைக்கோஸ்

ரூ.30 முதல் ரூ.40 வரைக்கும், முள்ளங்கி ரூ.20முதல் ரூ.25வரைக்கும், பூண்டு ரூ.140-க்கும், இஞ்சி ரூ.60ரூ.65 வரைக்கும் விற்கப்பட்டது.

புஷ்பீன்ஸ் ரூ.65 முதல் ரூ.70வரைக்கும், மேரக்காய் ரூ.34-க்கும், வாழைக்காய் ரூ.30முதல் ரூ.45வரைக்கும், நெல்லிக்காய் ரூ.40 முதல் ரூ.50க்கும், கொய்யாப்பழம் ரூ.40முதல் ரூ.60 வரைக்கும், எலுமிச்சை பழம்ரூ.100முதல் ரூ.140 வரைக்கும், பப்பாளி ரூ.24 முதல் ரூ.30 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

----

Tags:    

மேலும் செய்திகள்