நவீன திரையில் காய்கறி விலை பட்டியல்

பழனி உழவர்சந்தையில் நவீன திரையில் காய்கறி விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-16 19:00 GMT

பழனி அண்ணாநகர் பகுதியில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுப்புற விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி, பழங்களை நேரடியாக விற்பனை செய்கின்றனர். காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரை வியாபாரம் நடைபெறுகிது. உழவர்சந்தையில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதாலும், மார்க்கெட் பகுதியை காட்டிலும் குறைந்த விலையில் காய்கறி கிடைப்பதாலும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறியை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் பழனி உழவர்சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை குறித்த விவரம் வாயில் பகுதியில் உள்ள அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு வந்தது. இதில் அன்றைய நாளில் விற்கப்படும் காய்கறி விலை (தரத்தை பொறுத்து) எழுதப்பட்டு இருக்கும். இந்நிலையில் தற்போது பழனி உழவர்சந்தையில் காய்கறி விலை குறித்த பட்டியலை மக்கள் எளிதாக பார்வையிடும் வகையில் நவீன திரை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் காய்கறியின் படத்துடன் கூடிய விலை விவரம், வெளிச்சந்தையில் விலை நிலவரம் ஆகியவை குறிப்பிடப்படும். இதனை விவசாயிகள், பொதுமக்கள் பார்த்து பயனடைந்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்