அழிந்து வரும் வெற்றிலை பாக்கு தாம்பூலம்

Update: 2022-10-27 14:54 GMT


வெற்றிலை பாக்கு போடுவது கெட்ட பழக்கமாகவும், மது குடிப்பது நவநாகரீகத்தின் அடையாளமாகவும், புகைப்பிடிப்பது ஸ்டைலாகவும் மாறிப்போனது. இவை அனைத்தையும் சாதாரண பழக்கமாக மா(ற்)றி மதுபிரியர்களின் கூடாரமாய் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் இளைஞர்களாக சிலர் உள்ளனர்.

தமிழ் கலாசாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது தாம்பூலம் எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு. வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவார்கள்..

அனைத்து விழாக்களிலும், பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள். தமிழன் வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில்....புற்றுநோய் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை..... முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.

நோய்களை தீர்க்கும் அருமருந்து

ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

கலாார சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது. வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை கருத்தரிப்பு மையங்களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது. வாயில் புற்றுநோய் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு எனச் சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.

சித்த மருத்துவம்

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், ஆங்.. தாம்பூலமா அப்படின்னா? எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது. அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போமே.

மேலும் செய்திகள்