வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜனதா, மக்களை ஏமாற்றி வருகிறது- கி.வீரமணி

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜனதா, மக்களை ஏமாற்றி வருகிறது என கி.வீரமணி கூறினார்.

Update: 2023-02-22 19:15 GMT

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜனதா, மக்களை ஏமாற்றி வருகிறது என கி.வீரமணி கூறினார்.

பொதுக்கூட்டம்

'சமூக நீதிக்கான நெடும்பயணம்' என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், அமைப்பாளர் அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கவுதமன், மன்னார்குடி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் இன்ப கடல் வரவேற்றார். கூட்டத்தை பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் தொடங்கி வைத்து பேசினார்.

கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:-

ஏமாற்றி வருகிறது

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மத்தியில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால் திராவிட மாடல் ஆட்சி சொன்னதை செய்த ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழக கவர்னர் அரசியல் பேசுவது தவறு. தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் அரசியல் பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக. மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்னார்குடி நகர திராவிடர் கழக செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்