திருவள்ளூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா; கவர்னர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கவர்னர்கள் பங்கேற்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவிலுக்கான கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கவர்னர்களுக்கு கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி நாயுடு தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் கவர்னர்கள் இருவரும் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.