சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயண நிகழ்ச்சி
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயண நிகழ்ச்சி நடந்தது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் இந்திர விழா தொடங்கியது. இதையொட்டி திருவெண்காடு சுப்பிரமணிய கன பாடிகள் வேதபாராயண அமைப்பின் சார்பில் சாமி, அம்பாள் மற்றும் நடராஜர் சன்னதி முன்பு 50-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்களின் வேதபாராயண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அறங்காவலர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வண வேதங்களை பாராயணம் செய்தனர். நாடு சுபிட்சமாக இருத்தல், அமைதி நிலவ வேண்டுதல், மக்கள் நோயற்று குறைவில்லாத செல்வத்தை பெற வேண்டுதல் உள்ளிட்ட பிரார்த்தனைகளை முன்னிறுத்தி இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற வேத பண்டிதர்களுக்கு கோவில் நிர்வாக அதிகாரி முருகன், தலைமை அர்ச்சகர் கந்தசாமி சிவாச்சாரியார் மற்றும் அர்ச்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.