வி.சி.க. தேர்தல் பணிக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் வி.சி.க. தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தமயந்தி திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மண்டல தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் உஞ்சையரசன் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் செயலாளர் தமிழ்மாறன், மண்டல செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் பொன்னிவளவன், தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் நெப்போலியன் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு கிராமத்திலும் பூத் கமிட்டி அமைத்தல், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்தல், தேர்தல் பணி செய்தல் சம்மந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பழனியம்மாள், கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் பாசறைபாலு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கலையழகன் நன்றி கூறினார்.