வடுவூர் கோதண்டராமர் கோவிலில் வசந்த உற்சவம்

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் வசந்த உற்சவம்;

Update: 2023-06-01 18:45 GMT

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் வசந்த உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி சன்னதியில் இருந்து ருக்குமணி, சத்தியபாமா சமேதராக கோபாலன் சாமியை எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து பிரகாரங்கள் வழியாக வீதி உலா நடத்தப்பட்டு கோவிலின் மேற்கு கோபுரம் அருகில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சாமிகளை எழுந்தருள செய்தனர். அங்கு சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பிரகார உலா நடத்தப்பட்டு கொடிமரத்தின் முன்பு கும்ப தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்