முத்தாரம்மன் கோவில் வருசாபிஷேகம்

உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது.

Update: 2022-07-07 16:49 GMT

உடன்குடி:

உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்