கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருசாபிஷேக விழா
கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஸ்ரீதேவி, நீலாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு விஷ்வ ஷேன ஆராதனம், காலை 6 மணிக்கு சுதர்சன ஹோமம், காலை 7 மணிக்கு பூர்ணாகுதி, அபிஷேகம், திருமஞ்சனம், காலை 9 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.