வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
தரடாபட்டு ஊராட்சியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகில் உள்ள தரடாபட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மு.பெ.கிரி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
முகாமில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோ.ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், துணைச் செயலாளர் எல்.ஐ.சி. வேலு, முன்னாள் செயலாளர் ஜெயராமன், வட்டார மருத்துவ அலுவலர் செலின்மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.