வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது;

Update: 2022-09-22 18:45 GMT

குத்தாலம் அருகே திருமங்கலம் ஊராட்சி செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமங்கலம், முருகமங்கலம், பொன்னூர் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு திருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, அன்பரசு, வட்டார மருத்துவ அலுவலர் பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர் வரவேற்றார். இதில், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி  வைத்தார். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கண், கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிதல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் திருமங்கலம், முருகமங்கலம், பொன்னூர் ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில், சுகாதார ஆய்வாளர் நடராஜன், முருகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர், பொன்னூர் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு உறுப்பினர் செஞ்சி சரண்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்