வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

மின்னூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-25 16:35 GMT

ஆம்பூரை அடுத்த மின்னூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளாராக மாதனூர் தி.மு.க. ஒன்றிய செயலாளரும் மாதனூர் ஒன்றிய குழு தலைவருமான ப.ச.சுரேஷ்குமார் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்ட மருத்துவ பெட்டகங்களையும் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சசிகலா சாந்தகுமார், மருத்துவ அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவர் தாரணி, ஒன்றிய தி.மு.க.அவைத்தலைவர் ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பசுமை தமிழ்நாடு திட்ட இயக்கத்தின்கீழ் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நடந்த விழாவில் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்திசீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்