வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

அரக்கோணம் அருகே வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-23 18:19 GMT

அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை, பல், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், கர்ப்பிணிகளுக்கு தாய், சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது. மகளிர் குழு சார்பில் பல்வேறு ஸ்டால்கள் அமைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தீனதயாளன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள், அவைத்தலைவர் நரசிம்மன், மாவட்ட பிரதிநிதி சம்பத், வட்டார மருத்துவ அலுவலர் ரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி, டாக்டர்கள் வெற்றிச்செல்வன், கனிமொழி, சுகாதார ஆய்வாளர்கள் பூஞ்செழியன், பெருமாள், தேவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்