வருமுன் காப்போம் திட்ட இலவச பொது மருத்துவ முகாம்

அகரம்சேரியில் வருமுன் காப்போம் திட்ட இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-10-21 17:58 GMT

அணைக்கட்டு

குடியாத்தம் தாலுகா, கல்லப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் அகரம்சேரி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கூடநகரம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மாலதி வரவேற்றார்.

முகாமில் அகரம்சேரி, சின்னசேரி, கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர், கூடநகரம் கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

இதில், பொது மருத்துவம், கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எலும்பு மற்றும் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 20 பேருக்கு ரத்த சோகை நோயும், 5 பேருக்கு எலும்புருக்கி நோய், 2 பேர் இதய நோயும், 90 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்கள் மேல்சிகிச்சை பெற வேலூர், குடியாத்தம் அரசு மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் மொத்தம் 1334 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

ஏற்பாடுகளை அகரம்சேரி ஊராட்சி மன்ற தலைவர் வச்சலாராஜ்குமார், துணை தலைவர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி நித்தியானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்