`வாரிசு, துணிவு படங்கள் நன்றாக ஓட வேண்டும்': நடிகர் பிரபு

`வாரிசு, துணிவு படங்கள் நன்றாக ஓட வேண்டும்' என்று நடிகர் பிரபு தெரிவித்தார்.

Update: 2023-01-08 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறும் போது,டைரக்டர் முத்தையா இயக்கும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் நடிக்கிறேன். அந்த படத்திற்காக கோவில்பட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்து உள்ளேன். விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் நன்றாக ஓட வேண்டும். அந்த 2 பேரும் நம் தம்பிகள்தான், என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்