கராத்தே செல்வின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் அஞ்சலி

பாளையங்கோட்டையில் கராத்தே செல்வின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.;

Update:2023-03-27 01:49 IST

பாளையங்கோட்டையில் கராத்தே செல்வின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

நினைவு தினம்

காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவன தலைவர் கராத்தே செல்வின் நாடார் 26-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

கராத்தே செல்வின் மனைவி வயோலா செல்வின் தலைமையில், அகில இந்திய கராத்தே செல்வின் நாடார் நற்பணி மன்ற மாநில தலைவர் செட்டிகுளம் ராஜ், பொருளாளர் வின்சிலின் மற்றும் காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து கராத்தே செல்வின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

பா.ஜ.க.- ச.ம.க.

பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் ஏராளமானவர்கள் கராத்தே செல்வின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். காமராஜர் ஆதித்தனார் கழக தென்மண்டல அமைப்பு செயலாளர் கப்பல் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளும் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செங்குளம் கணேசன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், மாநில மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன், புறநகர் மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின், நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் உள்ளிட்டவர்களும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி

நெல்லை தட்சணமாற நாடார் சங்க நிர்வாகசபை உறுப்பினர்கள் சாரா டி.சவுந்தர்ராஜ் நாடார், நித்திய பாலையா நாடார், காமராஜ் நாடார், நயினார் நாடார் உள்ளிட்டவர்களும் கராத்தே செல்வின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி உயர்மட்ட குழு உறுப்பினர் அச்சுதன் நாடார் தலைமையில், மாவட்ட செயலாளர் செல்வன், நிர்வாகி டாப் ராஜா உள்ளிட்டவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பனங்காட்டு படை

கராத்தே செல்வின் நினைவு தினத்தையொட்டி பனங்காட்டு படை கட்சியினர் மாநில இளைஞர் அணி தலைவர் பேய்க்குளம் அந்தோணி நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பில் சரத்மணி மற்றும் நிர்வாகிகளும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

சத்திரிய நாடார் சங்கம்

காமராஜர் மக்கள் பேரியக்க நிர்வாகி ராணி நாடார் தலைமையில் ஏராளமானவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

அகில இந்திய சத்திரிய நாடார் சங்க தலைவர் ராஜா வீரமணி, துணைத்தலைவர் செல்வம், மாநில பொதுச்செயலாளர் காந்திராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி நெல்லை- நாகர்கோவில் மெயின் ரோடு மற்றும் கல்லறை தோட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பெருமாள்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்