கோவில்களில் வளர்பிறை பிரதோஷ பூஜை

சிவகிரி பகுதியில் உள்ள கோவில்களில் வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது.;

Update: 2023-06-01 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி நீலகண்ட சுவாமி சமேத மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை வளர்பிறை பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் வலம்வர பெண்கள் தேவார பாடல்கள் பாடியபடி வந்தனர். பின்னர் நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், பயறு, பால் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

இதேபோல் சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்ரமணிய சுவாமி கோவில், தென்மலை திரிபுரநாதேஸ்வரர்-சிவபரிபூரணி அம்மன் கோவில், தாருகாபுரம் மத்தியஸ்த நாதர் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், சிவகிரி அருகே சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்தி கண்டேஸ்வரர் கோவில், ராமநாதபுரம் சுயம்புலிங்க சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்