வராகி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

தர்மபுரியில் வராகி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

Update: 2022-08-24 17:10 GMT

தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சித்தலிங்கஸ்வரர் கோவில் வளாகத்தில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இந்த மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் பூர்த்தி ஓம யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்