வரதராஜபெருமாள் கோவில் திருவிழா

தோப்புத்துறை வரதராஜபெருமாள் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-09-11 16:11 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் பல்லக்கு சேவை, கருட சேவை, அனுமந்த வாகனம், யானை, இந்திர விமானம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டு பல்லக்கு சேவை நிறைவடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்